அரசை விமர்சிக்க அனைவரும் பயப்படுவதாகக் கூறிய தொழிலதிபர் ராகுல் பஜாஜுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
எகனாமிக் டைம்ஸ் விருது விழா நிகழ்ச்சி நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் மத்திய அமைச்சர்கள் முன்னரே அரசின் மீது தனது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மத்திய அரசை விமர்சிக்க அனைவரும் பயப்படுவதாகவும், இப்போது வரி தீவிரவாதம் நிலவுவதாகவும் பகிரங்கமாகப் பேசியிருந்தார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசை விமர்சனம் செய்யத் தைரியம் இருந்ததாகவும், இப்போது பயமாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
ராகுல் பஜாஜின் இந்த விமர்சனக் கருத்துக்கு கிரண் மஜூம்தார் உள்ளிட்ட தொழில் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொழில் துறையினர் கைவிடப்பட்டவர்கள் போல இருப்பதாகவும் கிரண் மஜூம்தார் கூறியுள்ளா